News April 10, 2025

ஒலிம்பிக் கிரிக்கெட் பார்க்க ரெடியா?

image

அமெரிக்காவின் லாஸ்-ஏஞ்சலஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டிகளும் விளையாடப்படவுள்ளன. டி20 ஃபார்மேட்டில் நடைபெறவிருக்கும் இப்போட்டிகளில், 6 அணிகள் பங்கேற்கும் என்று ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. எந்த 6 அணிகள் விளையாடவுள்ளன, எங்கு போட்டிகள் நடைபெறவுள்ளன போன்றவை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 9, 2025

உலகை உலுக்கிய விமான விபத்துகள்

image

பயணத்தின் போது நிகழும் விபத்துகள் எப்போதும் பெரும் துயரத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக விமான விபத்துகளில், நொடியில் உயிர்கள் பறிபோவது மனதை ஆழமாக உலுக்குகிறது. ஏராளமான விமான விபத்துகள் நடந்திருந்தாலும், சில சம்பவங்கள் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தின. சில துயரமான விபத்துகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.

News November 9, 2025

திமுக ஆட்சி Total Failure: EPS

image

தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருவதாக EPS தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். நெல் கொள்முதல் முதல், கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருள்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட திமுக ஆட்சி Total Failure எனவும் EPS சாடியுள்ளார்.

News November 9, 2025

சற்றுமுன்: தமிழக பிரபலம் காலமானார்

image

திருவள்ளுவர் பிறந்த இடம் கன்னியாகுமரி என தனது ஆய்வுகள் மூலம் எடுத்துரைத்த பிரபல எழுத்தாளர் எஸ்.பத்மநாபன்(91) காலமானார். வரலாற்று பண்பாட்டு ஆய்வாளர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முகத் திறமை கொண்ட அவர், குமரி வரலாற்று மற்றும் கலாசார ஆராய்ச்சி மையத்தின் நிறுவனராகவும் இருந்துள்ளார். பத்மநாபன் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

error: Content is protected !!