News April 10, 2025
HDFC வங்கி சேவைகள் இயங்காது

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC, தங்களது சேவைகளை மேம்படுத்த சிஸ்டம் பராமரிப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. வரும் 12ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை (4 மணி நேரம்) இந்தப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில், தங்களது வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு UPI சேவைகள் இயங்காது என்று HDFC அறிவித்துள்ளது. கவனமாக இருங்கள் வாடிக்கையாளர்களே.
Similar News
News January 9, 2026
பராசக்திக்கு U/A சான்றிதழ்

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 15 இடங்களில் கட் செய்ய தணிக்கை வாரியம் அறிவுறுத்தியதாக கூறப்பட்ட நிலையில், மறுஆய்வுக் குழுவை படக்குழு அணுகியிருந்தது. தற்போது தணிக்கை சான்றிதழ் சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதால் திட்டமிட்டபடி ‘பராசக்தி’ நாளை ரிலீசாகிறது. மேலும், தமிழகம் முழுவதும் ’பராசக்தி’ படத்திற்கான முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ளது.
News January 9, 2026
உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி, ஆற்றல், மனநிலை ஆகியவற்றை சில உணவுகளின் மூலம் அதிகரிக்க முடியும். சிறிய தேர்வுகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவர்களின் நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் உணவுகள் என்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத உங்களுக்கு தெரிந்த உணவை கமெண்ட்ல சொல்லுங்க.
News January 9, 2026
ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்சார் விவகாரம் விஜய் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்னை HC உத்தரவிட்டது. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே CBFC தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் படம் ரிலீஸாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் கேரள விநியோகஸ்தரான SSR Entertainments நிறுவனம் ‘January 14 JanaNayagan’ என X-ல் பதிவிட்டுள்ளது.


