News April 10, 2025

கோயில் கட்டுமான பணியின் போது தவறி விழுந்து தொழிலாளி பலி 

image

மானூர் அருகே நாஞ்சான்குளம் பகுதியில் உள்ள பழமையான கோவிலில் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. கடந்த 3-ம் தேதி கட்டிட தொழிலாளியாக பணியாற்றிய அதே ஊரைச் சேர்ந்த பாஸ்கர் சுமார் 12 அடி உயரமுள்ள கட்டிடத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்-09) உயிரிழந்தார். மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 5, 2025

நெல்லை: டிகிரி முடித்தால் மத்திய அரசு வேலை

image

மத்திய அரசின் கீழ் இயங்கும் நிதி நிறுவனத்தில் ( OICL ) 500 அசிஸ்டண்ட் காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 முதல் 62,265 வரை வழங்கபடுகிறது. டிகிரி முடித்தவர்கள் 02.08.2025 முதல் 17.08.2025 க்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News August 5, 2025

கவின் கொலை.. சுர்ஜித் தாயாருக்கு சம்மன்!

image

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி, குற்றவாளி சுர்ஜித்தின் தயார் கிருஷ்ணகுமாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர், ஆகஸ்ட் 15க்குள் நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

News August 5, 2025

BREAKING: கவின் கொலை.. யாரும் தப்பிக்க கூடாது!

image

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கை நெல்லை நீதிபதி தலைமையில் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதில் இன்று, கவின் கொலை வழக்கில் யாரும் தப்பிக்க கூடாது. முறையாக விசாரணை நடத்தி 8 வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!