News April 10, 2025
குணால் கம்ராவுக்கு வந்த பிக்பாஸ் ஆஃபர்

சமீபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த பேசியதால் பெரும் சிக்கலில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா சிக்கினார். வழக்குகளை சந்தித்து வரும் அவருக்கு சூப்பர் ஆஃபர் ஒன்று வந்துள்ளது. சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்க தயாரா? என அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் செல்வதற்கு பதில் நான் மெண்டல் ஹாஸ்பிடலுக்கு செல்வது நல்லது என்பது போல் குணால் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 4, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 448 ▶குறள்: இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். ▶ பொருள்: குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.
News September 4, 2025
சோனியா காந்தி பற்றி மோடி அவதூறாக பேசினார்: தேஜஸ்வி

யாருடைய தாயாரையும் அவதூறாக பேசக்கூடாது என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். PM மோடியின் தாயார் பற்றி காங்., கட்சியினர் அவதூறாக பேசியதற்கு எதிராக இன்று NDA கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, சோனியா காந்தி குறித்து மோடி அவதூறாக பேசியதாகவும், நிதிஷ் குமாரின் DNA பற்றி கேள்வி எழுப்பியதாகவும் கூறி சாடியுள்ளார். இது தற்போது விவாதமாகியுள்ளது.
News September 4, 2025
5 படங்களுக்கு சைன் பண்ணுவேன்: SK கலகல

ரஜினியே தனது ரோல் மாடல் என்று ‘மதராஸி’ பட புரமோஷன்களில் SK தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், நாளை நீங்கள் கண் விழிக்கும்போது ரஜினியாக மாறினால் என்ன செய்வீர்கள் என SK-விடம் கேட்கப்பட்டது. அதற்கு, உடனடியாக 5 படங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன் என்ற அவர், ஏனென்றால் ரஜினியின் சம்பளம் மிகவும் அதிகம் என்று காமெடியாக கூறினார். மீண்டும் தன்னுடைய Idol ரஜினி என்றும் கூறி SK நெகிழ்ந்தார்.