News April 10, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 302
▶குறள்: செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற. ▶பொருள்: வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.
Similar News
News September 5, 2025
BREAKING: மீண்டும் ஒன்றிணையும் அதிமுக?

அதிமுக மீண்டும் ஒன்றிணைவதற்கான சமிக்ஞையை <<17618597>>செங்கோட்டையன்<<>> கொடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். தனக்கு வந்த 2 வாய்ப்புகளை தியாகம் செய்தவன் என அழுத்தம் திருத்தமாக, 2017-ல் CM பதவி அவரை தேடி வந்ததை மறைமுகமாக கூறியுள்ளார். மூத்த நிர்வாகிகள் சிலர் தன்பக்கம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விரைவில் OPS, சசிகலா, TTV ஆகியோர் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதாம்.
News September 5, 2025
டெல்லி சென்றது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்

பாஜக அழைத்ததால்தான் டெல்லி சென்று தலைவர்களை சந்தித்ததாக செங்கோட்டையன் கூறியுள்ளார். கட்சித் தலைமைக்கு தெரியாமல் அவர் டெல்லி சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். இதன் மூலம், அதிமுகவை ஒன்றிணைக்க BJP முயல்வதாக கூறப்படுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உங்கள் கருத்து என்ன கமெண்ட்ல சொல்லுங்க.
News September 5, 2025
செங்கோட்டையனுக்கு ஆதரவு கரம் நீட்டிய நயினார்

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் கூறியதை வரவேற்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிரிந்துள்ள அனைவரும் இணைந்து, அதிமுக கூடுதல் வலிமை பெற வேண்டும் என்பதே தனது கருத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். சசிகலா, OPS, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் இணைக்க வேண்டும் என அடுத்தடுத்து பலரும் கருத்து தெரிவித்து வருவதால், இது EPS-க்கு கூடுதல் அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.