News April 10, 2025
மீண்டும் தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி..

‘பரியேறும் பெருமாள்’ தொடங்கி ‘வாழை’ வரை தனக்கென தனி இடம் பிடித்த மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ படத்தை இயக்கியுள்ளார். இப்போ ஹாட் டாப்பிக் பைசன் அல்ல மாரியின் அடுத்த படம். சரித்திர படமான இதில் தனுஷ் நடிக்கிறாராம். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, போஸ்டருடன் வந்துள்ளது. D56க்கு ரெடியா?
Similar News
News July 9, 2025
கேட் கீப்பர் தூங்கியதே விபத்துக்கு காரணம்!

கடலூர் செம்மங்குப்பத்தில் நேர்ந்த விபத்துக்கு கேட் கீப்பர் தூங்கியதே காரணம் என்பது தெரியவந்துள்ளது. 7.10 மணிக்கு ரயில் வருவது குறித்து அவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கேட்டை மூடாமல் மீண்டும் தூங்கியுள்ளார். கேட்டை மூட மறந்துவிட்டதாக பங்கஜ் சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். So Sad!
News July 9, 2025
4 ஆண்டுகளுக்கு பின் டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர்

3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர் இணைந்துள்ளார். 3-வது டெஸ்டுக்கான அணியில் ஒரு மாற்றத்தை இங்கிலாந்து அணி செய்துள்ளது. அதன்படி 4 ஆண்டுகள் கழித்து டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாட உள்ளார். முழு உடல் தகுதியை எட்டாததால் முதல் 2 டெஸ்டில் ஆர்சர் விளையாடவில்லை. ஜோஷ் டங்கிற்கு பதில் அவர் அணியில் இணைந்துள்ளதால் இங்கிலாந்து பந்து வீச்சு மேலும் வலுவடைந்துள்ளது.
News July 9, 2025
செயல்படாத ஜன் தன் கணக்குகள் முடக்கம்?

வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் வசதியுடன் ஜன் தன் சேமிப்பு கணக்கை மத்திய அரசு அளிக்கிறது. இக்கணக்கில் குறைந்தபட்ச பணம் எதுவும் இருப்பு வைக்க வேண்டியதில்லை என்பதால் நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், பல ஜன் தன் வங்கி சேமிப்பு கணக்குகள் செயல்படாமல் இருப்பதாகவும், அதை முடக்க அரசு உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது.