News April 10, 2025

ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் பிரபலம் காலமானார்

image

ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் பிரபலம் மார்வின் லெவி (96) காலமானார். ஜூராசிக் பார்க் புகழ் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் பி.ஆர்.ஓ.ஆக 50 ஆண்டுகளாக அவர் பணிபுரிந்துள்ளார். மக்களிடம் படங்களை எப்படி கொண்டு செல்வது என்பதில் நிபுணத்துவம் பெற்று விளங்கியதால், லெவிக்கு கடந்த 2018-ல் கவுரவ ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டது. இதன்மூலம் ஆஸ்கர் விருது பெற்ற ஒரே பி.ஆர்.ஓ. எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Similar News

News January 14, 2026

திண்டுக்கல் அருகே விபத்து!

image

திண்டுக்கல்: வத்தலகுண்டு- செம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 14, 2026

அடக்குமுறையின் உச்சத்தில் திமுக அரசு: சீமான்

image

கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய ஈசன் முருகசாமி உட்பட 9 பேரை திமுக அரசு விடுவிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். பட்டப்பகலில் கொலை, பாலியல் வன்கொடுமை செய்வோரை கைது செய்யாத திமுக அரசு, அப்பாவி விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதாக அவர் X-ல் சாடியுள்ளார். இது அடக்குமுறையின் உச்சம் என்று குறிப்பிட்டுள்ள சீமான், அவர்களுக்கு எதிரான வழக்கை திரும்பபெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!