News April 3, 2024

கச்சத்தீவை மீட்டு காட்டுவோம் – அமைச்சர் ரகுபதி

image

நாகை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து சட்டத்துறை துறை அமைச்சர் ரகுபதி மீனவ கிராமங்களில் நேற்று வாக்கு சேகரித்தார். அக்கரைப்பேட்டை, கல்லார், உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர், “இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இராமநாதபுரம் ராஜாவின் வாரிசு மூலம் வழக்கு தொடர்ந்து கச்சத்தீவை மீட்டு காட்டுவோம்” என உறுதியளித்தார்.

Similar News

News April 13, 2025

ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

நாகை மாவட்டத்தில் DEEP Teacher Ambassador இன் இரண்டாவது வருடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பாக அதிக அளவில் PET ஆசிரியர்களை ஆசிரியர் தூதர்களாக தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு விண்ணப்பிக்க http:// Forms gle/TKrupJ3noNkh7SHd9 ல் பதிவிறக்கம் செய்து வருகிற 20ஆம்  தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

News April 13, 2025

நாகை சிக்கல் முருகன் கோவில்

image

நாகையில் புகழ்பெற்ற சிக்கல் முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்தியாக வீற்றிருக்கும் முருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

News April 13, 2025

நாகையில் பயிற்சியுடன் கூடிய வேலை

image

ஐ.ஒ.பி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் DEEE முடித்த நாகை மாவட்ட கிராம புறத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு 30 நாட்கள் தொழில் பழகுநர் பயிற்சி இலவசமாக மத்திய அரசு சான்றுடன் வழங்கப்படுகிறது. மே 5ஆம் தேதி தொடங்க உள்ள பயிற்சியில் பங்குபெற 6374005365 / 8870940443 என்ற ஏதேனும் ஒரு எண்ணில் முன் பதிவு செய்ய பயிற்சி நிறுவன இயக்குனர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார்.

error: Content is protected !!