News April 9, 2025
பிஜேபி சேலம் மாநாட்டுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்

தமிழக பாஜக மாநில தலைமையின் வழிகாட்டுதலின்படி ஏப்ரல் 19ஆம் தேதி ஓமலூரில் நடைபெறவிருக்கும் சேலம் பெருங்கோட்ட மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு தர்மபுரி மாவட்ட மற்றும் மண்டல அளவில் பொறுப்பாளர்களை இன்று தர்மபுரி மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் சரவணன் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு கட்சித் தொண்டர்கள் ஒத்துழைப்பு தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News January 16, 2026
தருமபுரி: காணும் பொங்கலுக்கு இன்னும் பிளான் பண்ணலையா?

கலைநயம் மிக்க சிற்பங்கள், வற்றாத ஒகேனக்கல் & அதியமான் நெடுமான் அஞ்சி வாழ்ந்த வரலாற்றுப் பெருமை கொண்டது தருமபுரி மாவட்டம். இத்தகைய சிறப்புமிக்க மண்ணில், இந்தக் காணும் பொங்கலுக்கு ஒகேனக்கல், தீர்த்தமலை, மேலகிரி மலை, சுப்ரமணிய சிவா நினைவிடம் மற்றும் முதலைகள் பண்ணைக்கு உங்கள் குடும்பத்துடன் சென்று இயற்கை எழிலையும், வரலாற்றையும் ரசித்தபடி இந்த காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்! ஷேர் பண்ணுங்க!
News January 16, 2026
தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளுவர் தின கொண்டாட்டம்!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் 2வது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இன்று இ (ஜன.16) தருமபுரி எம்எல்ஏ, எஸ்பி வெங்கடேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டு, திருவள்ளுவரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
News January 16, 2026
தருமபுரி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்!


