News April 9, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு.

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 9 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அவளூர் நெமிலி கலவை கொண்டபாளையம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100

Similar News

News April 19, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

போக்குவரத்து கழகத்தில் 1004 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்

News April 19, 2025

ராணிப்பேட்டையில் இடி, மின்னலுடன் மழை!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 19) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளதால் அவசர தேவைகள் இல்லாமல் வெளியே செல்லாமல் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

News April 19, 2025

ராணிப்பேட்டையில் ஆதி மனிதர்களின் ரகசிய கல்குகை

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆதிமனிதர்கள் வசித்த கல்குகை ஒன்று அமைந்துள்ளது. இங்கு செல்ல அடர்ந்த காட்டை கடக்க வேண்டும். சோளிங்கர் பெரிய மலைக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இந்த குகையில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இது திருடன் குகை எனவும் அழைக்கப்படுகிறது. மலை உச்சியில் முழுக்க முழுக்க கற்களால் இந்த குகை கட்டப்பட்டுள்ளது. ட்ரெக்கிங் செல்ல இது ஒரு சிறந்த இடமாக உள்ளது.ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!