News April 9, 2025
இது தேவையா? தொண்டையில் மீன் சிக்கி இளைஞர் மரணம்

சென்னை மதுராந்தகம் அருகே தொண்டையில் மீன் சிக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 29 வயதான மணிகண்டன் அங்குள்ள ஏரியில் கைகளால் மீன்பிடித்தார். அப்போது 2 மீன்கள் சிக்கவே, அதில் ஒரு மீனை தனது வாயில் வைத்தபடி இன்னொரு மீனை கைகளில் பிடித்துக்கொண்டார். இதில் வாயில் இருந்த மீன் நழுவி தொண்டையில் போய் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
Similar News
News November 11, 2025
இந்த நாடுகளின் பழைய பெயர்கள் தெரியுமா?

இப்போது நமக்கு பரிச்சயமான பல நாடுகள், முன்பு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டன. அவற்றில் சில: *ஜப்பான் – நிப்பான் *ஸ்ரீலங்கா – சிலோன் *தாய்லாந்து – சயாம் *ஈரான் – பெர்சியா *எத்தியோப்பியா – அபிசீனியா *இராக் -மெசபடோமியா *மியான்மர்- பர்மா *தைவான்- ஃபார்மோசா *கானா- கோல்ட் கோஸ்ட் *ஜிம்பாப்வே -தெ.ரொடீசியா உங்களுக்கு தெரிந்த வேறு நாடுகள், நகரங்களின் பழைய பெயர்களை கமெண்ட் பண்ணுங்க.
News November 11, 2025
டெல்லி சம்பவம்… பின்னணியில் காங்கிரஸா? பொன்னார்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அங்கு குண்டுவைத்தது காங்கிரஸ்காரர் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டிய அவர், இன்னும் 2 நாள்களில் இதுபற்றி தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார். இதில் காங்கிரஸிற்கு என்ன ரோல்? குறிப்பாக ராகுல் காந்திக்கு என்ன ரோல்? என்பதெல்லாம் வெளிவரும் என்றும் அவர் பேசியுள்ளார்.
News November 11, 2025
Delhi Blast: NIA விசாரணை தொடக்கம்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தின் விசாரணை NIA-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ள இச்சம்பவத்தை அனைத்து கோணங்களிலும் டெல்லி போலீஸ் விசாரித்து வந்தது. இதில் தீவிரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், வழக்கினை NIA-விற்கு உள்துறை அமைச்சகம் மாற்றியுள்ளது. டெல்லி போலீஸ் சேகரித்த ஆதாரங்களை பெற்றுள்ள NIA, விரைவில் முதற்கட்ட தகவல் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.


