News April 9, 2025
சேலத்தில் நாளை மதுக்கடைகள் இயங்காது!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை (ஏப்ரல் 10) சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News April 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஏப்ரல்.28 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.
News April 28, 2025
சேலம் மாநகரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஏப்ரல் 28ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News April 28, 2025
சேலத்தில் 99.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

சேலம் மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். எனினும் பலர் தர்பூசணி, நீர்மோர் ஆகியவற்றை பருகி சூட்டைத் தணித்து வருகின்றனர். சேலத்தில் இன்று (ஏப்.28) 99.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வாரத்திற்கு பிறகு 100 டிகிரிக்கு கீழ் வெப்பநிலை குறைந்துள்ளது.