News April 9, 2025
தட்கல் டிக்கெட் கட்டணம் தெரியுமா?

அவசர பயணத்திற்காக தட்கல் டிக்கெட் வசதி, ரயில்களில் அமலில் உள்ளது. இந்த தட்கல் ரயில் டிக்கெட்டுக்கு, வழக்கமான டிக்கெட் கட்டணத்தை விட சிறிது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதன் விவரத்தை பார்க்கலாம். * 2ம் வகுப்பு இருக்கை – ₹10-₹ 15 *2ம் வகுப்பு படுக்கை -₹100-₹200 *ஏசி இருக்கை வசதி -₹125-₹225 *ஏசி 3ம் வகுப்பு- ₹300-₹400 *ஏசி 2ம் வகுப்பு- ₹400- ₹500 *எக்சிக்யூட்டிவ் வகுப்பு- ₹400-₹500.
Similar News
News July 9, 2025
மாமியாரே என் துணிகளை துவைக்கிறார்: Priyanka Chopra

துணி துவைப்பது எப்படி என்று தனது மாமியாரே கற்றுக் கொடுத்ததாக பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். ஆனாலும் அவரே தனது துணிகளை துவைப்பதாகவும் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும், துணிகளை மடித்து அயர்ன் செய்வது எளிதானது என்றாலும், அவற்றை துவைப்பது என்பது சற்று கடினமான வேலை என்றும் அவர் தெரிவித்துள்ளார். உங்கள் துணிகளை எப்போது நீங்களே துவைக்க தொடங்கினீர்கள்? (அ) துவைக்கப் போகிறீர்கள்?
News July 9, 2025
குஜராத் பாலம் விபத்து: PM மோடி இரங்கல்

குஜராத்தில் <<17003795>>பாலம் இடிந்து விழுந்த விபத்தில்<<>> உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமரின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்த கோர விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PMNRF நிதியிலிருந்து தலா ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 9, 2025
முடி கொட்டுதா? இந்த பிரச்னையாகவும் இருக்கலாம்…

இன்றைய தலைமுறையினருக்கு பெரிய பிரச்னையே முடி உதிர்வுதான். என்ன பண்ணாலும் முடி கொட்டுவது நிற்பதில்லை என புலம்புபவர்கள் தான் அதிகம். அது மரபியல், ஹார்மோன் பிரச்னைகளையும் சார்ந்தது என்றாலும், சிலரின் Lifestyle-ம் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பழக்கங்கள் உங்களுக்கு இருந்தால், உடனே அவற்றை மாற்றிக் கொள்ளுங்கள்.