News April 9, 2025
தர்மபுரி தொங்கும் தூண் பற்றி தெரியுமா?

தர்மபுரியில் மிகவும் பிரிசித்தி பெற்ற கல்யாண காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அழகிய சிற்பங்களுடன் காணப்படும், தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால் மறுப்பக்கம் வந்துவிடும். 2000 கிலோ எடை கொண்ட இந்த தூண் அந்தரத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொங்கும் தூண் என அழைக்கப்படுகிறது. இது தமிழரின் கட்டடக்கலைக்கு ஒரு சோறு பதம் ஆகும். *இது பற்றி தெரியாத நண்பர்களுக்கு பகிரவும்*
Similar News
News October 28, 2025
தருமபுரி: தமிழ் தெரிந்தால் போதும், அரசு வேலை!

தமிழத்தில் காலியாக உள்ள 1,429 HEALTH INSPECTOR பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, MPHW/ சுகாதார ஆய்வாளர் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18-60 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் <
News October 28, 2025
பயிற்சி கையேடுகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கிய ஆட்சியர்

தருமபுரி ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து இளம் நுகர்வோர்களுக்கான புத்தாக்க பயிற்சியினை ஆட்சியர் சதீஸ் இன்று (அக்.28) துவக்கி வைத்தார். இப்புத்தாக்க பயிற்சி கையேடுகளை பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் முக்கிய அதிகாரிகள் இருந்தனர்.
News October 28, 2025
தருமபுரி: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

தருமபுரி மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்.


