News April 9, 2025
திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு சனிக்கிழமை வேலைநாள்

திருவாருர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 26.11.2024, 27.11.2024 அன்று மழைக்கால விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் விதமாக 12.04.2025 மற்றும் 19.04.2025 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளும் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 5, 2026
திருவாரூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

திருவாரூர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தவலை SHARE பண்ணுங்க.!
News January 5, 2026
திருவாரூர் மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆதார் மையங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ஆதார் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூரில் ஜன.11 அன்றும், கூத்தாநல்லூரில் ஜன.18 அன்றும், நீடாமங்கலத்தில் ஜன.25 அன்றும் நடைபெற உள்ளது. ஆதார் அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் செய்து பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News January 5, 2026
திருவாரூர்: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் <


