News April 9, 2025
பெட்ரோலுக்கு இவளோ வரி கட்டுறோமா!

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் நாம் ₹43.68 வரியாக செலுத்துகிறோம். அதாவது, நாம் செலுத்தும் ₹102-ல் கிட்டத்தட்ட ₹58 மட்டுமே பெட்ரோலின் விலை. இந்த வரியில் மத்திய அரசுக்கு 21.90 ரூபாயும், மாநில அரசுக்கு 21.78 ரூபாயும் வரியாக செல்கிறது. பெட்ரோல் & டீசலை GSTக்குள் கொண்டு வந்தால் அதிகபட்சம் 28% மட்டுமே வரி விதிக்க முடியும் என்பதால்தான் மத்திய, மாநில அரசுகள் அத்திட்டத்தை எதிர்க்கின்றன.
Similar News
News January 14, 2026
இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

₹1,000 மகளிர் உரிமைத் தொகை தற்போது தகுதியான மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமைத் தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படாது என்பதை அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, அரசு & தனியார் நிறுவனங்களில் ஊதியம் பெறுபவராக இருக்கக்கூடாது. எந்தவொரு உதவித்தொகையும் பெறக்கூடாது. பள்ளி, கல்லூரி மாணவிகளாக இருக்கக்கூடாது. உரிமைத்தொகை பெறுவோர் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியாது.
News January 14, 2026
மதுப் பிரியர்களுக்கு அடுத்தடுத்து ஷாக்

திருவள்ளுவர் தினமான ஜன.16-ல் புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, அன்றைய தினம் அனைத்து டாஸ்மாக்குகளையும் மூட தமிழக அரசும் உத்தரவிட்டிருந்தது. அத்துடன், ஜன.16, 26 (குடியரசு தினம்), பிப்.1 (வடலூர் வள்ளலார் நினைவு தினம்) ஆகிய 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் ஷாக்கில் உள்ளனர்.
News January 14, 2026
10-வது போதும்.. ₹19,900 சம்பளம்!

NCERT-ல் Lower Division Clerk, Computer Operator Grade-III உள்பட 176 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன ✱வயது: 18- 50 வரை ✱கல்வித்தகுதி: 10-வது முதல் டிகிரி வரை வேலைக்கு ஏற்ப மாறுபடுகிறது ✱தேர்வு முறை: எழுத்துத் தேர்வு & நேர்காணல் ✱சம்பளம்: ₹19,900 – ₹78,800 ✱விண்ணப்பிக்க <


