News April 9, 2025
GPay, Paytm யூசர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

UPI பரிவர்த்தனையின் தினசரி வரம்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கி, NPCI-க்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், P2M பரிவர்த்தனை (தனிநபர் to வணிகர்கள்) செய்யும் பரிவர்த்தனையை ₹2 லட்சத்தில் இருந்து, ₹5 லட்சமாக உயர வாய்ப்புள்ளது. ஆனால், P2P பரிவர்த்தனை (தனிநபர் to தனிநபர்) வரம்பு அதிகரிக்க வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளிவந்துள்ளது. நீங்க ஒரு நாளைக்கு UPI பரிவர்த்தனை எந்த அளவிற்கு செய்யுறீங்க?
Similar News
News September 1, 2025
கூட்டணியை உறுதி செய்கிறார் ஓபிஎஸ்..

OPS மாநாடு தள்ளிவைப்பு குறித்து புதிய தகவல் கசிந்துள்ளது. பாஜக கண்டுக்கவே இல்லை, EPS-ம் புறக்கணிக்கிறார். இதனால், வலுவான கூட்டணியை அமைந்தபிறகு மாநாட்டை நடத்தலாம் என ஆதரவாளர்கள் கூறியதால் OPS இந்த முடிவை எடுத்திருக்கிறாராம். விஜய் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் OPS தரப்பு 10 சீட்கள் வரை கேட்பதாகவும், கூட்டணி உறுதியான பின் மாநாடு தேதி அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
News September 1, 2025
பிசினஸில் வெற்றி பெற 7 டிப்ஸ்!

வாழ்க்கையில் முன்னேற வெற்றியாளர்கள் கூறும் டிப்ஸ். *சிறியதாய் தொடங்கி பெரியதாய் கட்டமையுங்கள். *முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அதை முதலில் செய்யுங்கள். *ஒரு நாளைக்கு 3 நல்ல முடிவுகளை எடுங்கள். *முன்னேற்றத்தை பற்றி சிந்திக்க மறந்துவிடாதீர்கள். *இரவில் நல்ல ஓய்வு எடுங்கள். *எப்போதும் உங்களுடைய பலத்தை முழுமையாக நம்புங்கள். *கஸ்டமர்கள், ஊழியர்களுடன் நல்லுறவை உருவாக்குங்கள்.
News September 1, 2025
மெகா கூட்டணிக்கான ப்ளானில் EPS.. விரைவில் அறிவிப்பு?

அதிமுக கூட்டணியை உறுதிசெய்யும் வகையில் இம்மாதம் கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்த EPS திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதற்காக கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்ட விருந்து கொடுக்கும் ப்ளானில் உள்ள EPS, தேமுதிக, பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளையும் அங்கு அழைத்து, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தனித்தனி டீம் அமைத்துள்ளாராம். உருவாகுமா மெகா கூட்டணி?