News April 9, 2025
USA-வை எதிர்க்க இந்தியாவை அழைக்கும் சீனா

அதிகவரி விதித்து உலக நாடுகளை டிரம்ப் அச்சுறுத்தி வருகிறார். இந்த அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியாவும், சீனாவும் பொருளாதார, வர்த்தக ரீதியில் இணைந்து செயல்பட வேண்டும் என டெல்லியில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கையை கூட்டாக எதிர்க்க வேண்டும் எனவும், பன்முகத்தன்மையை நிலைநாட்ட வேண்டும் எனவும் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
Similar News
News November 3, 2025
BREAKING: முதல் முறையாக அறிவித்தார் விஜய்

தவெக ஆரம்பித்து 21 மாதங்களுக்கு பிறகு, முதல்முறையாக 3 அணிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து, விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடு விமர்சிக்கப்பட்டது. அதேபோல், கட்சி நிர்வாகிகளை நியமிக்காமல் இழுத்தடிப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், முதல்கட்டமாக மகளிர் அணி, மாணவர் அணி, இளைஞர் அணிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை விஜய் நியமித்துள்ளார்.
News November 3, 2025
இதில் AI பற்றி கற்கலாம்; முந்துங்க..!

AI பற்றி தெரிந்தவர்களுக்கே வேலை கிடைக்கும் என்ற நிலை வெகு தொலைவில் இல்லை என வல்லுநர்கள் சொல்கின்றனர். ஆனால், சாதாரண மக்களுக்கு AI கற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்கான போதிய நிதி இல்லை. உங்களுக்காகவே இலவசமாக AI Tools பற்றிய Course-களை கூகுள் வழங்குகிறது. இப்போதே கூகுளுக்கு சென்று ’AI Essentials Specialization’ என டைப் செய்யுங்கள் போதும். அனைவரும் பயனடையட்டும், SHARE THIS.
News November 3, 2025
இதை செய்யவில்லை என்றால் ஓட்டு போட முடியாது மக்களே

SIR-காக வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவத்தை பொதுமக்கள் நிரப்பிக் கொடுக்காவிட்டால், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என்று TN தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா எச்சரித்துள்ளார். அதேபோல், முகவரி மாற்றம் செய்திருந்தாலும், அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறாது எனவும் தெரிவித்துள்ளார். SIR-க்கு தடைகோரி SC-ஐ நாட திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.


