News April 9, 2025

சமையல் எண்ணெய் தூத்துக்குடி துறைமுகம் சாதனை

image

தூத்துக்குடி துறைமுகம் 2024 – 25 நிதியாண்டில் 4,70,352 டன் சமையல் எண்ணெய் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு 2023 இதே வேளையில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 581 டன்கள் மட்டுமே கையாண்டு இருந்தது. சமையல் எண்ணெய் கையாள்வதில் துறைமுகம் 14.28% வளர்ச்சி அடைந்துள்ளதாக துறைமுக செய்தி குறிப்பு இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 24, 2025

BREAKING கோவில்பட்டி அருகே விபத்தில் 35 பேர் காயம்

image

கழுகுமலை பகுதியைச் சேர்ந்த 20 குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இருக்கன்குடிக்கு மொட்டை எடுப்பதற்காக சென்று விட்டு ஊர் திரும்பியுள்ளனர். அப்போது கோவில்பட்டி – நல்லி சத்திரத்திற்கு இடையே நெடுஞ்சாலையில் டயர் வெடித்து வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள் உட்பட 35 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் கோவில்பட்டி, தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News August 24, 2025

தூத்துக்குடியில் இனி உடனடி தீர்வு

image

தூத்துக்குடி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், சாலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்பதை போட்டோவுடன் <>இங்கே கிளிக் செய்து<<>> பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும். இந்த தகவலை Share பண்ணுங்க.!

News August 24, 2025

திருச்செந்தூர் அருகே கடைக்குள் புகுந்த கார்

image

கடலூரை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று திருச்செந்தூர் – தூத்துக்குடி சாலையில் ஆறுமுகநேரி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாரையோரத்தில் இருந்த மரத்தில் மோதி அருகே இருந்த பூக்கடைக்குள் புகுந்தது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த லட்சுமணன் என்பவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!