News April 9, 2025
வரி விதிப்பு: கவலையில் ஆழ்ந்த சந்திரபாபு நாயுடு

உலகளாவிய கடல் உணவு ஏற்றுமதியில் ஆந்திரா முன்னணியில் இருக்கிறது. தேசிய அளவில் இறால் உற்பத்தியில் மட்டும் அதன் பங்கு 76%. பல நாடுகளுக்கு இறக்குமதி வரியை உயர்த்திய டிரம்ப், ஈக்வடாருக்கு 10% மட்டுமே விதித்துள்ளார். இதனால், கடல் உணவு சந்தையை அந்நாடு எளிதாக பிடிக்கக்கூடும். எனவே, கடல் உணவுக்காவது வரிவிலக்கு பெற முயற்சிக்குமாறு மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு அவசர கடிதம் எழுதியுள்ளார்.
Similar News
News November 2, 2025
பிரசவ நாள் நெருங்கும்போது செய்ய வேண்டியவை

➤குழந்தையின் நிலை, இதயத்துடிப்பு, தாயின் ஆரோக்கியம் ஆகியவை சீராக உள்ளனவா என்பதை தொடர்ந்து செக் பண்ணுங்க ➤சத்தான உணவு, பழம், பால் போன்றவற்றைச் சீராக எடுத்துக் கொள்ளவும் ➤மெதுவான நடைபயிற்சி/மருத்துவர் பரிந்துரைத்த யோகா செய்யலாம் ➤ஆடைகள், டயப்பர், மருத்துவ ஆவணங்கள், சார்ஜர், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை அருகிலேயே வைத்துக்கொள்ளுங்கள் ➤ கர்ப்பிணியை தனியாக விட வேண்டாம். SHARE THIS.
News November 2, 2025
மழை வெளுக்கப் போகுது… வெளியே வராதீங்க

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 10 மணி வரை திருவள்ளூர், வேலூர், தி.மலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகையால், இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே!
News November 2, 2025
தமிழர்கள் உரிமை பறிபோகும்: வேல்முருகன்

தமிழ்நாட்டில் இருக்கும் பிற மாநிலத்தவர்கள் அவரவர் மாநிலங்களுக்கு சென்று வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு சட்டப்பேரவை மற்றும் MP-க்களை தமிழ் மக்களே தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், SIR அடிப்படையில் இங்குள்ள பிற மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டால், தமிழர்களின் உரிமை பறிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.