News April 9, 2025

வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவித்தொகை 2/2

image

பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்திருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ மாணவியருக்கு மற்றும் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்களுக்கு வழங்கப்படமாட்டாது.

Similar News

News April 19, 2025

பெண்கள் உதவி மையத்தில் வேலை

image

ஒருங்கிணைந்த சேவை – பெண்கள் உதவி மையத்தில், தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.10,000 – ரூ.12,000 வழங்கப்படும். பாதுகாப்பாளர் பணிக்கு பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். பன்முக உதவியாளர் பணிக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு, வரும் 30ஆம் தேதிக்குள் சென்னை கலெக்டர் ஆபிசுக்கு நேரடியாகவோ அல்லது இ-மெயில் மூலமாகவோ அனுப்பலாம்.

News April 19, 2025

3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் 

image

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, 4 வழிச்சாலை மேம்பால கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, நாளை (ஏப்.20 முதல் ஏப்.22ஆம் தேதி வரை தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை செல்லும் வாகனங்கள் செனட்டாப் சாலை, சேமியர்ஸ் ரோடு வழியாக சென்று நந்தனம் சந்திப்பில் இடது வலது புறம் திரும்பி தங்கள் இலக்கை சென்று அடையலாம் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஷேர் செய்யுங்கள்

News April 19, 2025

குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் 

image

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு, நேற்று (ஏப்.18) தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் குழாய் மூலம் வீட்டு சமையல் எரிவாயு வழங்கப்படும் என தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையர் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!