News April 9, 2025
‘நீட்’ நாடகத்தை நிறுத்துங்கள்: அண்ணாமலை

நீட் தேர்வு குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அண்ணாமலை அறிவித்துள்ளார். நீட் விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க CM ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை, நீட் எதிர்ப்பு என்ற பெயரில் நடத்தும் சுயநல நாடகத்தை நிறுத்திவிட்டு, மாணவர்களை நிம்மதியாக படிக்க விடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 18, 2026
ராணிப்பேட்டை: +12, ITI, டிப்ளமோ முடித்தவரா நீங்கள் ?

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th,டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News January 18, 2026
தமிழ் திரைப்பட எடிட்டர் காலமானார்

‘டிஷ்யூம்’, ‘ரோஜாக்கூட்டம்’ ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய பீட்டர் பாபியா (58) காலமானார். நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்றுவந்த பாபியா, அவரது சொந்த ஊரான சேலம் அஸ்தம்பட்டியில் பஸ்ஸில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர், ஹாஸ்பிடல் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். பாபியாவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 18, 2026
விவசாயிகளுக்கான மதிப்பு குறைந்து வருகிறது: கார்த்தி

விவசாயிகளை இச்சமூகம் பெரிதாக அங்கீகரிப்பதில்லை என கார்த்தி கவலை தெரிவித்துள்ளார். உழவன் விருதுகள் விழாவில் பேசிய அவர், விவசாயிகளுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருந்தாலும், அவர்களுடைய உழைப்பு ஒருபோதும் நின்றுவிடவில்லை என கூறியுள்ளார். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி விவசாயிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோரை சமூகம் கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


