News April 9, 2025

தோவாளை : இன்றைய மலர்கள் விலை விபரம்

image

குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இன்றைய (ஏப்.09) விலை நிலவரம். 1 கிலோ பிச்சி ரூ.1100, மல்லி ரூ.600, சம்பங்கி ரூ.250, அரளி ரூ.320, வாடாமல்லி ரூ.60, கிரேந்தி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.60, துளசி ரூ.30, பன்னீர் ரோஜா ரூ.150, மஞ்சள் செவ்வந்தி ரூ.240, வெள்ளை செவ்வந்தி ரூ.340, மரிக்கொழுந்து ரூ.70, தெத்தி ரூ.100 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Similar News

News April 19, 2025

குமரி மாவட்டத்திற்கு 255.05 டன் கைத்தறி நூல் கொள்முதல்

image

கன்னியாகுமரி மாவட்ட நெசவாளர்களுக்காக கைத்தறி நூல் மத்திய அரசின் தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மூலம் 255.05 டன் கைத்தறி நூல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நூலுக்கு மத்திய அரசு 15 சதவீதம் வரை மானியமாக வழங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 19, 2025

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியர் தகவல்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்; சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நாகர்கோவில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இம்மாதம் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளத்தில் <>லிங்க்<<>> விண்ணப்பிக்கலாம். முதலில் வரும் 100 மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். *ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

நாகர்கோவில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு 

image

நாகர்கோவில் நெல்லை ரயில் பாதையில் மறுகால் குறிச்சி தண்டவாளப்பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் காயங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது, தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!