News April 9, 2025
மளமளவென சரியும் கச்சா எண்ணெய் விலை

சர்வதேச பொருளாதார பிரச்னைகள் காரணமாக கச்சா எண்ணெயின் விலை மளமளவென சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, அதன் விலை $2.40 குறைந்து $60.42க்கு வர்த்தகம் ஆகிறது. கச்சா எண்ணெயின் விலை $100 இருந்தபோதும் இந்தியாவில் பெட்ரோல் ₹100க்கு விற்கப்பட்டது. தற்போதும் விலை குறைப்பின்றி ₹100லேயே நீடிக்கிறது. இதனால், கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன்களை மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News September 19, 2025
பிஹாரில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹1000

20-25 வயதுக்குட்பட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படும் என பிஹார் CM நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். முன்னதாக, 10, 12-வது தேர்ச்சி பெற்று, உயர்கல்வி படிக்கமுடியாத வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பட்டதாரிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வேலையில்லாதவர்களுக்கு ₹600 வழங்கப்படுகிறது.
News September 19, 2025
கோவையை கண்ட்ரோலில் எடுக்க திமுக போடும் ஸ்கெட்ச்

கோவையில் அதிமுக-பாஜகவுக்கான மவுசு கூடியிருப்பதாக உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அறிவாலயத்தை அலறச் செய்திருக்கிறதாம். இதனால் கோவை கிங் என கருதப்படும் செந்தில் பாலாஜியை வரும் தேர்தலில் கோவையில் களமிறக்கவும், கடந்த சட்டமன்றத்தேர்தலில் கரூரை கண்ட்ரோலில் வைத்திருந்த SB-யின் சகோதரர் அசோக்கை அங்கு நிறுத்தவும் தலைமை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
News September 19, 2025
12வது தேர்ச்சி போதும்.. ₹35,000 சம்பளத்தில் வேலை!

IGI Aviation Services-ல் காலியாக உள்ள 1,017 Ground Staff பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18- 30 வயதுக்குட்பட்ட 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து & நேர்முக தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹25,000- ₹35,000 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். முழு விவரங்களுக்கு <