News April 9, 2025
தி.மலையில் ICICI வங்கியில் நிதி ஆலோசகர் வேலை

தி.மலையில் இயங்கி வரும் ICICI வங்கியில் நிதி ஆலோசகருக்கான 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 25-60 வயதுக்குள் இருக்கும் எல்லா பாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம். பகுதி நேர வேலையான இதற்கு SSLC முடித்திருந்தால் போதுமானது. வரும் ஜூன் 11ஆம் தேதி வரை இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
Similar News
News April 19, 2025
விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

ஆரணி, அக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயியான இவர் உடல்நிலை குறைவால் நீண்ட காலம் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷத்தை அருந்தி உள்ளார். ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
News April 19, 2025
ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

திருவண்ணாமலை, கலசபாக்கம் அடுத்த தேவராயம் பாளையத்தை சேர்ந்தவர் ஐயப்பன் (8). பள்ளி விடுமுறை என்பதால் நேற்று (ஏப்ரல்.18) ஏரியில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உள்ளார். அந்த வழியாக சென்ற மக்கள் சிறுவனை மீட்டு ஆதமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 18, 2025
தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில்

ஒவ்வொரு மனித உடலும் ஆலயம் போன்றது என்பது சித்தர்களின் வாக்கு. பணம், பதவி எது இருந்தாலும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையே சிறந்த செல்வம். தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உக்கலில் அமைந்துள்ளது. இங்கு நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து, இறைவனின் கட்டளைக்குப் பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம். ஷேர் பண்ணுங்க