News April 9, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை மது கடைகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மது கூடங்கள் நாளை 10 ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் விடுமுறை. மீறி மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்ததால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
திருப்பத்தூர்: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? செம்ம ஈஸி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
திருப்பத்தூர்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில், இன்று (செப்.18) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் சப்-டிவிஷன்களில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளும், இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவைப்பட்டால், பொதுமக்கள் இந்த எண்களைத் தொடர்புக்கொள்ளலாம்
News September 17, 2025
ஆம்பூர் கலவர வழக்கு: 7 பேர் ஜாமீனில் விடுதலை

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் கடந்த மாதம் (ஆக.28) நடைபெற்ற கலவர வழக்கில், கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 7 பேருக்கு, இன்று (செப்.17) சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜாமினில் விடுவிக்கப்பட்டவரகள்:
1. ஃபைரோஸ்
2. அதீக் அஹமது
3. சான் பாஷா
4. முனீர்
5. தப்ரேஸ்
6. நவீத் அஹமது
7. அயாஸ் பாஷா