News April 9, 2025

சிவகங்கையில் குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி

image

சிவகங்கை வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. குரூப்1 தேர்வுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது நுாலகத்தில் உள்ள புத்தகங்களை பயன்படுத்தலாம். இது தவிர <>இந்த இணையதளத்திலும்<<>> பதிவிறக்கம் செய்யலாம், என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அரசு பணியில் சேர விரும்புவோர்க்கு SHARE செய்து உதவவும்.

Similar News

News October 20, 2025

திருப்புவனம் நகரில் நீர் புகும் அச்சம்

image

திருப்புவனம்: நகரை ஒட்டிய நீர் வரத்து கால்வாய்களில் மணல் திருட்டு அதிகரித்ததால் கரைகள் பலவீனமடைந்துள்ளன. வடகிழக்கு மழையால் வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்படவுள்ள நிலையில், பிரமனூர் கால்வாய் வழியாக அதிவேகமாக நீர் பாயும் அபாயம் நிலவுகிறது. இதனால் வண்டல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் நீர் நகரில் புகும் அச்சம் எழுந்துள்ளது. மணல் திருட்டை தடுத்து கரைகள் சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News October 19, 2025

சிவகங்கை: தீபாவளிக்கு காவல்துறை அறிவுறுத்தல்

image

சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவுறுத்தலில், தீபாவளி கொண்டாட்டத்தில் பாதுகாப்பை பின்பற்றுங்கள், அதிக ஒலி பட்டாசுகளை தவிர்க்கவும், குழந்தைகள் பெரியவர்களுடன் மட்டுமே வெடிக்கவும், மின் வயர்கள் இல்லாத இடங்களில் வெடிக்கவும், அரசு அனுமதித்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவும். பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுங்கள் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது‌.

News October 19, 2025

சிவகங்கைக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை.!

image

மன்னார் வளைகுடா மற்றும் அதைன ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக சிவகங்கையில் நாளை (அக்.20) தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!