News April 9, 2025

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

ஈக்காடு அருகே உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் ‘டான்செம்’ வாயிலாக வாரும் 19ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழக தொழில் வளர்ச்சி கழகத்தின் ‘டான்செம்’ நிறுவனம், வேலைவாய்ப்பு பயிற்சி வழங்குகிறது. ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், செவிலியர், ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டதாரிகள் பங்கேற்கலாம். உள்நாடு, வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

Similar News

News October 29, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (அக்.28) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 28, 2025

புயல் முன்னெச்சரிக்கை–மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் வடகிழக்கு பருவமழை மற்றும் மோன்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (அக்.28) பாக்கம் பெரிய ஏரி பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஏரியில் நீர்வரத்து தடையில்லாமல் இருக்க கால்வாய்களை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

News October 28, 2025

திருவள்ளூர்: மோந்தா புயல்-உதவி எண் அறிவிப்பு

image

வங்க கடலில் மையம் கொண்டுள்ள மோந்தா புயலால், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க எம்பி சசிகாந்த் செந்தில் உதவி எண்களை அறிவித்துள்ளார். (உதவி எண் – 94455 00346 / +91 44-27660991) இதில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்வு காணப்படும் என அறிவித்துள்ளார்.

error: Content is protected !!