News April 9, 2025
ட்ரோன் பறக்க தடை

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கோவை வருகையை முன்னிட்டு சூலூர் விமானப்படை தளத்தை சுற்றிலும் 10 கிமீ சுற்றளவில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டு சூலூரில் இருந்து வெலிங்டன் வரை நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 2, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.03) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், ஆனைமலை, வே.புதூர், சேத்துமைடை, மாரப்பகவுண்டன்புதுார், ஒடையகுளம், குப்புச்சிபுதூர், ராமச்சந்திராபுரம், சரளைபதி. கிழவன்புதூர், செம்மேடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 2, 2025
கோவைக்கு விடுமுறை: எழுந்த கோரிக்கை!

கோவையில் நாளை கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் தீப திருநாளன்று விடுமுறை அறிவித்திருப்பது போல் கோவையிலும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டி இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பாக மாநில பொறுப்பாளர் சூர்யா தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (டிசம்பர்.1) மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
News December 2, 2025
கருமத்தம்பட்டி அருகே 16 பேர் அதிரடி கைது!

கருமத்தம்பட்டி அருகே கொள்ளுப்பாளையம் பகுதியில், கருமத்தம்பட்டி போலீசார் வழக்கமாக ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு தென்னந்தோப்பு பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்து, 2 சேவல்கள், ரொக்கப் பணம் ரூ.9700, 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


