News April 9, 2025
CM தலைமையில் இன்று ‘நீட்’ தேர்வு ஆலோசனை கூட்டம்!

நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது. நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தக் கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் CM ஸ்டாலின் கலந்து ஆலோசிக்கவுள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் அவர் அழைப்பு விடுத்த நிலையில், அதிமுக பங்கேற்காது என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 3, 2025
தீபாவளிக்கு ₹20,000.. தமிழக அரசு அறிவிப்பு

மின் ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ₹10,000-ல் இருந்து ₹20,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, மின்வாரிய ஊழியர்களுக்கு முன்பணத்தை உயர்த்துவது குறித்து வாரியக் குழு ஆலோசனை நடத்தியது. அதில், ₹20,000 ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒவ்வொரு துறைக்கும் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
News September 3, 2025
ஆச்சரியம் ஆனால் உண்மை..!

குழந்தைகளை போல ஒவ்வொரு நாளும் ஒரு புது விஷயத்தை கற்றுக் கொள்வதில் யாருக்கு தான் ஆர்வம் இருக்காது. அந்த வகையில், வேடிக்கையாக இருக்கும் சில உண்மைகளை இங்கு தொகுத்துள்ளோம். மேலே இருக்கும் புகைப்படங்களை Swipe செய்து, சில Fun Facts-களை தெரிந்து கொள்ளுங்கள். இதில் உங்களை எது மிகவும் ஆச்சரியப்படுத்தியது என்பதை கமெண்டில் பதிவிடவும்.
News September 3, 2025
இந்தியாவுடன் கண்ணியமாக நடக்க வேண்டும்: பின்லாந்து

சீனாவில் நடந்த SCO மாநாடு ஐரோப்பா, USA-விற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார். இந்தியாவிடம் கண்ணியமான வெளியுறவுக் கொள்கையில் ஈடுபடாவிட்டால், உலக அரங்கில் தோற்றுவிடுவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். முன்பு மேற்குலக நாடுகளே ஏகாதிபத்திய சக்திகளாக விளங்கிய நிலையில், SCO மாநாடு ரஷ்யா, சீனா, இந்தியாவை ஒன்றிணைந்ததால் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.