News April 9, 2025
டிஜிட்டல் திருமண அழைப்பிதழ் மோசடி, காவல்துறை எச்சரிக்கை

இணைய குற்றவாளிகள் டிஜிட்டல் திருமண அழைப்பிதழ்களை வாட்ஸ் அப்பில் கோப்புகளாக அனுப்புகின்றனர். இந்த கோப்புகளை(Apk file) பதிவிறக்கினால் மோசடியாளர்கள் சட்டவிரோத பண பரிமாற்றங்களுக்கு உங்களது வங்கி கணக்கை பயன்படுத்தி கொள்வார்கள். எனவே தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் திருமண அழைப்பிதழ் வந்தால் அதை தொடவோ திறக்கவோ வேண்டாம். இணைப்புகளை திறப்பதற்கு முன் அனுப்புநரை சரிபார்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்
Similar News
News April 19, 2025
போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் இங்கு <
News April 18, 2025
நாளை இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் தர்மபுரம் கலைக்கல்லூரி தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் தருமபுரம் ஆதீனம் மணிவிழாவை முன்னிட்டு நாளை சனிக்கிழமை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் காலை 8:30 மணி முதல் 2:00 மணி வரை இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. முகாமில் ரூ.5000 மதிப்புள்ள இசிஜி எக்கோ ஸ்கேன் பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படவுள்ளது. பொதுமக்கள் பங்கேற்று பயன பெறலாம்.
News April 18, 2025
விளையாட்டு பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை ராஜன் தோட்டம், சாய் விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என மாவட்டஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மாவட்ட அளவிலான இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம் 18 வயதிற்குள்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவர்ருக்கு மயிலாடுதுறை ராஜன்தோட்டம் சாய் விளையாட்டரங்கில் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என்றார்.