News April 9, 2025
குமரியில் பிறந்த அரசியல் இமயம்!

கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரத்தில் 1933, மார்ச் 19ல், சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன், தங்கம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தான் குமரி அனந்தன். இயற்பெயர் அனந்த கிருஷ்ணன். அரசியலில் ஆர்வம் அதிகரிக்க, காங்கிரஸில் இணைந்து பணியாற்றினார். பனைமரத் தொழிலாளர் வாரியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவரது மறைவு அரசியல் தலைவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #RIP
Similar News
News September 19, 2025
பிரபாஸ் VS தீபிகா ரசிகர்கள் இடையே வார்த்தை போர்

<<17750330>>‘கல்கி 2’ <<>>படத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தீபிகா, பிரபாஸ் ரசிகர்களுக்கு இடையே சோஷியல் மீடியாவில் போர் வெடித்துள்ளது. ஷூட்டிங் நேரத்தை குறைக்க சொல்லி, கமிட்மெண்ட் இல்லாமல் இருந்தது தான் தீபிகா வெளியேற்றத்திற்கு காரணம் என பிரபாஸ் ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால், கர்ப்பிணியாக இருந்த போது ‘கல்கி 1’-ல் நடித்த தீபிகாவின் கமிட்மெண்ட் பற்றி பேச தகுதியில்லை என அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
News September 19, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 19, புரட்டாசி 3 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.
News September 19, 2025
பாலியல் வழக்கில் சமிர் மோடி கைது

முன்னாள் ஐபிஎல் சேர்மன் லலித் மோடியின் தம்பி சமிர் மோடி டெல்லி ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு தருவதாக கூறி பெண் ஒருவருக்கு சமிர் மோடி, தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டலும் விடுத்துள்ளார். அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சமீர் மோடி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் பணம் பறிப்பதற்காகவே புகாரளிக்கப்பட்டுள்ளதாக சமிர் மோடி தரப்பு கூறுகிறது.