News April 9, 2025
மிக மோசமான ரெக்கார்ட் நெருங்கும் CSK?

தொடர்ந்து 4 மேட்சில் தோற்று, பரிதாபமான சூழலில் CSK உள்ளது. இதே சூழலை முன்னரே ஒரு முறை CSK சந்தித்துள்ளது. 2022ல், 4 மேட்சில் வரிசையாக CSK தோற்றது. ஆனால், 5-வது மேட்சில் வென்றது. அந்த வருடம் தான் IPL வரலாற்றில் CSK-வின் மிக மோசமான ஆண்டு. ஆனால், இதுவரை 5 மேட்சில் தொடர்ச்சியாக CSK தோற்றது இல்லை. அடுத்து KKRயுடன் நடக்கும் மேட்சிலாவது வென்று, இந்த மோசமான ரெக்கார்ட்டை தவிர்க்குமா CSK?
Similar News
News April 19, 2025
இன்னைக்கு IPL-ல் டபுள் ட்ரீட்!

இன்று IPL-ல் டபுள் ட்ரீட். மாலை 3:30 மணிக்கு, GT vs DC அணிகள், அகமதாபாத்தில் மோதுகின்றன. இரவு 7:30 மணிக்கு RR vs LSG அணிகள் ஜெய்ப்பூரில் மோதுகின்றன. DC 6 மேட்ச்சில், 5-ல் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், GT 6 மேட்ச்சில், 4-ல் வெற்றி பெற்றுள்ளது. LSG 7 மேட்ச்சில், 4-ல் வெற்றி பெற்றுள்ள நிலையில், RR 7 மேட்ச்சில், 2-ல் மட்டுமே வெற்றி பெற்று தடுமாறுகிறது. இன்னைக்கு யார் ஜெயிப்பாங்க?
News April 19, 2025
இன்று உலக கல்லீரல் நாள்: உணவே மருந்து!

கல்லீரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19-ம் தேதி உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் தீம் ‘உணவே மருந்து’. உடலில் தேவையற்ற நச்சுக்களை நீக்குதல், ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருத்தல், வைட்டமின், ஊட்டச்சத்துகளை சேமித்து வைத்தல், பித்த உற்பத்தி சமன் உள்பட பல பணிகளை கல்லீரல் செய்கிறது. உலகில் 150 கோடி பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
News April 19, 2025
கூட்டணி புகைச்சல்: முற்றுப்புள்ளி வைத்த நயினார்

அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தது முதலே விமர்சனங்கள் எழுந்தன. அதிலும், ஆட்சியில் பங்கு என அமித் ஷா பேசியதாக வெளியான தகவல் அதிமுக முகாமில் அதிருப்தி தீயை பற்றி எரிய வைத்தது. உடனடியாக, அதை அணைக்க ‘கூட்டணி மட்டுமே’ என ஸ்டேட்மென்ட் விடுத்தார் இபிஎஸ். தற்போது நயினார் நாகேந்திரனும், அமித் ஷா அப்படி பேசவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். இதனால், கூட்டணிக்குள் ஏற்பட்ட புகைச்சல் தற்போது அடங்கியிருக்கிறது.