News April 3, 2024

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி!

image

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 16,07,051 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
1821 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு ஏப்-19 தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளா்களுக்கு வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பூங்கொடி நேற்று தொடங்கி வைத்தாா்.

Similar News

News February 7, 2026

திண்டுக்கல்: ஆதாரில் அப்டேட்.. இனி ரொம்ப ஈஸி!

image

திண்டுக்கல் மக்களே, ஆதார் கார்டு திருத்தங்களுக்கு ஆதார் மையங்களுக்கு அலையுறீங்களா? இதனால உங்கள் நேரம் வீணாகுதா? இனி அலைச்சலே இல்லை. இதுக்காகவே ‘<>Aadhaar App<<>>’ என்ற புதிய சூப்பர் செயலி வந்துருக்கு. இந்த ஒரு App போதும் நீங்களே, உங்க வீட்ல இருந்தே ஆதாரில் உள்ள செல்போன் எண் மற்றும் முகவரி விவரங்களை ஈஸியா திருத்தலாம். இதுக்கு கட்டணமா ரூ.75 மட்டும் செலுத்தினால் போதும், அலைச்சல் மிச்சம். SHARE பண்ணுங்க!

News February 7, 2026

திண்டுக்கல்: தொழிலாளியை கொன்ற 55 வயது கள்ளக்காதலி!

image

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் ஓடைப்பட்டியை சேர்ந்த தொழிலாளி ராஜமாணிக்கம், கள்ளக்காதலியான பாப்பாத்தியுடன் (55) பொருளூரில் வசித்து வந்தார். கடந்த 2023-ல் ராஜமாணிக்கம் படுகொலை செய்யப்பட்டார். கள்ளிமந்தையம் போலீசார் நடத்திய விசாரணையில், பாப்பாத்தியே அவரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த பழனி கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்விழி நேற்று குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News February 7, 2026

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தலைமை அலுவலக அதிகாரிகள், டிஎஸ்பிக்கள் மற்றும் ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அவசர தேவைக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!