News April 9, 2025
போலி கிப்லி தளம் குறித்து காவல்துறை எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் தற்போது Ghibli-பாணி படங்கள், உருவாக்குவதே ட்ரெண்ட்டாக உள்ளது. இந்நிலையில் புகைப்படத்தை கார்டூன் போல் மாற்றும் கிப்லி தளம் போலியாக பல உருவாக்கப்பட்டு வேகமாக செயல்படுகின்றன. இதை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபர்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே இதில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நெல்லை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News August 15, 2025
மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கி அசத்திய ஆசிரியர்

வெள்ளாங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று சுதந்திர தின விழா நடைபெற்றது. அப்போது பத்தாம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டு சமூக அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சமூக அறிவியல் ஆசிரியர் சங்கரநாராயணன் தனது சொந்த செலவில் தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கி ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து 12ம் வகுப்பிலும் அதிக மதிப்பெண் எடுக்க வாழ்த்து தெரிவித்தார்.
News August 15, 2025
நெல்லை இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News August 15, 2025
நெல்லை பாஜக மாநாடு ஒத்திவைப்பு

நாகாலாந்து ஆளுனர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெல்லையில் ஆகஸ்ட் 17ல் நடக்கவிருந்த பூத் பொறுப்பாளர் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக மாநில தலைவரும் உறுப்பினருமான பாஜக சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.