News April 9, 2025
கொலை வழக்கில் 8 வருடத்திற்கு பிறகு தீர்ப்பு

மயிலாடுதுறை கொத்த தெருவை சேர்ந்த மீனாட்சி. அவரது கணவர் தீனதயாளனிடம் ஜீவனாம்சம் கேட்டதற்காக தீனதயாளன் மற்றும் அவரது இரண்டாவது மனைவியின் மகன் செந்தில்குமார் இருவரும் சேர்ந்து மீனாட்சியை கடந்த 2017 ஆம் ஆண்டு அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். தீனதயாளன் வயது முப்பால் உயிரிழந்த நிலையில் செந்தில்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனையும் ரூ. 5000 அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
Similar News
News April 19, 2025
போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் இங்கு <
News April 18, 2025
நாளை இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் தர்மபுரம் கலைக்கல்லூரி தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் தருமபுரம் ஆதீனம் மணிவிழாவை முன்னிட்டு நாளை சனிக்கிழமை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் காலை 8:30 மணி முதல் 2:00 மணி வரை இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. முகாமில் ரூ.5000 மதிப்புள்ள இசிஜி எக்கோ ஸ்கேன் பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படவுள்ளது. பொதுமக்கள் பங்கேற்று பயன பெறலாம்.
News April 18, 2025
விளையாட்டு பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை ராஜன் தோட்டம், சாய் விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என மாவட்டஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மாவட்ட அளவிலான இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம் 18 வயதிற்குள்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவர்ருக்கு மயிலாடுதுறை ராஜன்தோட்டம் சாய் விளையாட்டரங்கில் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என்றார்.