News April 9, 2025
சென்னை ஏர்போர்ட்டில் ₹6.31கோடி போதைப்பொருள்

சென்னை விமான நிலையத்தில் ₹6.31 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த கென்யா நாட்டு பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை சோதித்த போது அப்பெண் சிக்கியுள்ளார். அவரது வயிற்றில் இருந்து 90 மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கடத்தல் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 4, 2025
உள்ளத்தை கொள்ளையடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

அழகால் வசீகரிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், பச்சை நிறத்தில் சேலை உடுத்தி விதவிதமான போட்டோஸ் எடுத்து இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்துள்ளார். அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிய இவர், தற்போது ‘BRO CODE’, ‘ஆர்யன்’ படங்களில் நடித்து வருகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?
News September 4, 2025
போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினேனா? MLA விளக்கம்

பஞ்சாபில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிய விவகாரம் குறித்து <<17592849>>ஆம் ஆத்மி MLA<<>> ஹர்மீத் சிங் விளக்கம் அளித்துள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் பொய்யான தகவலை கூறியதாகவும், தன்னை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டதாலேயே தப்பித்து சென்றதாகவும் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை கைது செய்ய முயன்றபோது, அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
News September 4, 2025
ஐபிஎல்-ல் அமித் மிஷ்ராவின் தரமான 3 சம்பவம்

ஐபிஎல்-ல் அதிக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது யார் தெரியுமா ? இந்த சாதனைக்கு உரியவர் அமித் மிஷ்ரா. அவர் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். 2018-ல் ஐதராபாத் அணிக்கு எதிராகவும், 2011-ல் பஞ்சாப் அணிக்கு எதிராகவும், 2013-ல் புனே அணிக்கு எதிராகவும் ஹாட்ரிக் எடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல ஐபிஎல்-ல் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் 174 விக்கெட்களுடன் 8வது இடத்தில் உள்ளார்.