News April 9, 2025
22-ல் ஜாக்டோ-ஜியோ பேரணி.. செவி சாய்க்குமா அரசு?

ஏப்ரல் 22-ம் தேதி 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரில் ஜாக்டோ-ஜியோ பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் ஜாக்டோ-ஜியோ வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
Similar News
News April 19, 2025
CSIR நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

சிஎஸ்ஐஆர்(CSIR) நெட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கல்லூரிகள், யுனிவர்சிட்டிகளில் உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு போல 5 அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக CSIR தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த பிப்.28 முதல் மார்ச் 2-ம் தேதி வரை நாடு முழுவதும் 326 மையங்களில் நடந்த இத்தேர்வை 1.75 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் தற்போது <
News April 19, 2025
இன்னைக்கு IPL-ல் டபுள் ட்ரீட்!

இன்று IPL-ல் டபுள் ட்ரீட். மாலை 3:30 மணிக்கு, GT vs DC அணிகள், அகமதாபாத்தில் மோதுகின்றன. இரவு 7:30 மணிக்கு RR vs LSG அணிகள் ஜெய்ப்பூரில் மோதுகின்றன. DC 6 மேட்ச்சில், 5-ல் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், GT 6 மேட்ச்சில், 4-ல் வெற்றி பெற்றுள்ளது. LSG 7 மேட்ச்சில், 4-ல் வெற்றி பெற்றுள்ள நிலையில், RR 7 மேட்ச்சில், 2-ல் மட்டுமே வெற்றி பெற்று தடுமாறுகிறது. இன்னைக்கு யார் ஜெயிப்பாங்க?
News April 19, 2025
இன்று உலக கல்லீரல் நாள்: உணவே மருந்து!

கல்லீரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19-ம் தேதி உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் தீம் ‘உணவே மருந்து’. உடலில் தேவையற்ற நச்சுக்களை நீக்குதல், ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருத்தல், வைட்டமின், ஊட்டச்சத்துகளை சேமித்து வைத்தல், பித்த உற்பத்தி சமன் உள்பட பல பணிகளை கல்லீரல் செய்கிறது. உலகில் 150 கோடி பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.