News April 9, 2025
நலமுடன் உள்ளேன்: ப.சிதம்பரம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த ப.சிதம்பரத்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே கடும் வெயிலின் காரணமாக நீரிழப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் எல்லாச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் X தளத்தில் அவரே தெரிவித்துள்ளார். தற்போது நலமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 19, 2025
அதிமுக கூட்டணியிலிருந்து SDPI விலகல்: அபூபக்கர் அறிவிப்பு

அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் அறிவித்துள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் அழிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரம், தற்போது SDPI எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி வைக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
News April 19, 2025
ஏன் டெவால்ட் பிராவிஸ் உடனே பிளேயிங் XI-ல் இருக்கணும்?

CSK-வில் துபே, தோனியை மட்டுமே நம்பி இருக்க முடியாது. அதே போல, மிடில் ஆர்டரில் மோசமாக சொதப்பி வருகிறது CSK. இதற்கு சரியான தீர்வாக டெவால்ட் பிராவிஸ் இருக்கக்கூடும். அவரின், T20 ஃபார்மும் சூப்பராக இருக்கிறது. அண்மையில் நடந்த SA20-ல் மிடில் ஆர்டரில் 291 ரன்களை விளாசி இருக்கிறார். CSK-விற்கும் இனி வரும் அனைத்து மேட்ச்சிலும் வெற்றி பெறுவது அவசியமானதாகும். பிராவிஸுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?
News April 19, 2025
MBBS தமிழில் படிக்க நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை 5 ஆண்டுகளும் தமிழில் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதே சமயம் இதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதால், அது குறித்து தேசிய மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசிக்கப்படும் எனவும் கூறினார். தமிழகத்தில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.