News April 9, 2025
BREAKING: குமரி அனந்தன் காலமானார்

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார். 93 வயதான குமரி அனந்தன் வயது மூப்பு மற்றும் சிறுநீரகப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். குமரி அனந்தன், தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசையின் தந்தை என்பதும் குறிப்படத்தக்கது.
Similar News
News November 9, 2025
இரவில் நடப்பதற்கு பாதுகாப்பான டாப் 10 நாடுகள்

இரவில் நடப்பதற்கு பாதுகாப்பான நாடுகள் எவை என உங்களுக்கு தெரியுமா? இது தொடர்பாக Gallup நடத்திய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது இரவு நேர குற்றங்களை வைத்து மட்டும் உருவாக்கப்பட்டதல்ல, எந்த அளவிற்கு தைரியத்தோடு மக்கள் நடக்கின்றனர் என்பதையும் சேர்த்தது. இந்த பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. டாப் 10 நாடுகளின், விவரத்தை SWIPE செய்து பார்க்கவும்.
News November 9, 2025
ஓஷோவின் பொன்மொழிகள்!

*வாழ்க்கையில் முக்கியமான ஒரே விடயம், உங்களைப் பற்றிய உங்கள் சொந்தக் கருத்து மட்டுமே. *உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும் தருணத்தில், நீங்கள் அழகாக மாறுகிறீர்கள். *இதயம் ஒரு பூவைப் போன்றது. அது திறந்திருக்காவிட்டால், அது அதன் வாசனையை இந்த உலகிற்கு வெளியிட முடியாது. *வாழ்க்கை மீது கோபப்படாதீர்கள். வாழ்க்கை உங்களை ஏமாற்றவில்லை, நீங்கள்தான் வாழ்க்கை சொல்வதைக் கேட்கவில்லை.
News November 9, 2025
தமிழ் தம்பதியின் கல்யாண பத்திரிகை.. SM-ல் வைரல்

சில மாதங்களுக்கு முன்பாக தமிழ் தம்பதி அடித்த வரவேற்பு பத்திரிகை, தற்போது உலகளவில் வைரலாகியுள்ளது. மருத்துவ துறையை சேர்ந்த மணமகன், மணமகள் மாத்திரை அட்டை வடிவில் பத்திரிகை அடித்து நண்பர்களுக்கு கொடுத்துள்ளனர். மாத்திரையின் உற்பத்தி இடத்தில் பெற்றோர் பெயரையும், பரிந்துரையில் முகூர்த்த தேதி, நேரத்தை குறிப்பிட்டுள்ளார். எல்லாம் சரி Expiry date இல்லையா என விளையாட்டாக நெட்டிசன்கள் கேட்கின்றனர்.


