News April 9, 2025
கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் எப்போது? அமைச்சர் பதில்

கூட்டுறவு சங்கங்களுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதற்கு அமைச்சர் பெரிய கருப்பன் பதில் அளித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் 1.59 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளதாகவும், அவர்களில் 97,83,634 பேரின் ஆதார், குடும்ப அட்டை விவரம் இணைக்கப்பட்டு உள்ளது, எஞ்சியோரின் விவரம் இணைக்கும் பணி நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் பணி முடிந்ததும் தேர்தல் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 21, 2026
காங்., செயற்குழு கூட்டத்தில் MP-க்கள் பங்கேற்காதது ஏன்?

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இதில், ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணசாமி, மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த் உள்ளிட்ட 7 MP-க்கள் பங்கேற்கவில்லை. இதனால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அவர்கள் டெல்லியில் இருப்பதால் பங்கேற்க முடியவில்லை என்று தமிழக பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறினார்.
News January 21, 2026
₹10 லட்சம் கோடி இழப்பு

ஐரோப்பா மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளின் சரிவு இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் வர்த்தகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சந்தை மூலதனம் சுமார் ₹10 லட்சம் கோடி சரிந்தது. முதலீட்டாளர்களுக்கு இது பெரும் இழப்பு.
News January 21, 2026
புவிசார் குறியீடு: 2-வது இடத்தில் தமிழ்நாடு

தமிழ்நாட்டின் தனித்துவமான அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் இதுவரை 74 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. புவிசார் குறியீடு பெற்றதில், இந்தியாவில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. 74 பொருட்களில் கைவினைப் பிரிவில் – 38, உணவுப் பிரிவில் – 9, உற்பத்திப் பிரிவில் – 3, விவசாயப் பிரிவில் – 24 என கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் 77 பொருள்களுடன் முதலிடத்தில் உள்ளது.


