News April 9, 2025

த்ரிஷாவுக்கு என்ன ஆச்சு?

image

நடிகை த்ரிஷாவின் சமீபத்திய புகைப்படங்களில், அவர் மெலிந்து காணப்படுவது பேசுபொருளாகியுள்ளது. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதா என ரசிகர்கள் குழம்பி வரும் நிலையில், தீவிர உடற்பயிற்சி, டயட் முறைகளாலேயே உடல் எடை குறைந்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்புக் கொண்ட படங்களின் கதாபாத்திரங்களுக்கு ஏற்றார்போல் மெலிந்து காணப்படுவதாக கூறப்பட்டாலும், இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிபடுத்தல்கள் இல்லை.

Similar News

News December 29, 2025

CM-ன் இரும்புக்கை துருப்பிடித்து விட்டது: நயினார்

image

திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொல்பவர்கள் சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என நயினார் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் கோர்ட் உத்தரவுகள் மதிக்கப்படுவதில்லை என்ற அவர், தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதியையே திமுகவினர் விமர்சனம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தவறுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று சொன்ன CM-ன் இரும்புக்கை துருப்பிடித்துவிட்டது எனவும் விமர்சித்துள்ளார்.

News December 29, 2025

ஷங்கர், ஹெச்.வினோத்துக்கு தூது விட்டாரா STR?

image

மாநாடு வெற்றிக்குப் பிறகு, சறுக்கல்களை சந்தித்து வரும் STR, ‘அரசன்’ படத்தை தொடர்ந்து முன்னணி இயக்குநர்களுடன் இணைய முடிவு செய்துள்ளாராம். அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்ட நிலையில், ஹெச்.வினோத், ஷங்கர் ஆகியோரிடமும் தூது அனுப்பப்பட்டுள்ளதாம். இதற்கிடையில், அஸ்வத் மாரிமுத்து படமும் வெயிட்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 29, 2025

எந்த காளையை அடக்கினார் கருணாநிதி? சீமான்

image

தமிழ் சங்கம் நடத்திய பாண்டித்துரைதேவரின் பெயரை மதுரை நூலகத்திற்கு ஏன் வைக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் என்ற அவர், காளை வளர்த்தாரா அல்லது அடக்கி காயம் பட்டாரா என கேட்டுள்ளார். மேலும், மதுரை மைதானத்திற்கு கருணாநிதி பெயருக்கு பதிலாக மூக்கையாதேவர் பெயரை வைத்திருக்கலாமே எனவும், எங்கள் அடையாளங்களை நிறுவுவதில் என்ன தவறு என்றும் பேசியுள்ளார்.

error: Content is protected !!