News April 8, 2025
39 பந்துகளில் சதம்

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இளம் வீரர் ப்ரியான்ஷ் ஆர்யா ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து கொண்டிருக்க, மறுபுறம் ப்ரியான்ஷ் 39 பந்துகளில் 102 ரன்களை கடந்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதில், 7 ஃபோர்களும் 9 சிக்சர்களும் அடங்கும். இவரது சதத்தை பஞ்சாப் அணியின் ஓனர் ப்ரீத்தி ஜிந்தா துள்ளிக் குதித்து கொண்டாடினார்.
Similar News
News January 13, 2026
சுதந்திரத்திற்கு பின் முதல்முறை அலுவலகம் மாறும் PM

நாடாளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்கள் ₹20,000 கோடியில் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பிரதமர் அலுவலகத்திற்கான (PMO) புதிய கட்டட பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ‘சேவா தீர்த்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில் பொங்கலுக்கு பிறகு PM மோடி பணியை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திரம் பெற்றது முதல் ‘சவுத் பிளாக்’ பகுதியில் இயங்கி வந்த PMO முதல்முறையாக மாற உள்ளது.
News January 13, 2026
சுதாவின் அடுத்த பட ஹீரோ யார்?

‘பராசக்தி’ வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் அப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டாராம். சிம்பு அல்லது துருவ் விக்ரமை வைத்து புதிய படத்தை அவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கடந்த காலங்களை போல் ஒவ்வொரு படங்களுக்கும் 6 ஆண்டுகள், 4 ஆண்டுகள் என இடைவெளி எடுக்காமல் இம்முறை உடனடியாக படத்தை இயக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
News January 13, 2026
ஜனவரி 13: வரலாற்றில் இன்று

*1915 – இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் ஏற்பட்ட 6.7 ரிக்டர் நிலநடுக்கத்தில் 29,800 பேர் உயிரிழந்தனர். *1949 – இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா பிறந்தார். *1964 – கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். *1993 – கெமிக்கல் ஆயுத தயாரிப்பை தடை செய்யும் உடன்படிக்கையில் பல நாடுகள் கையெழுத்திட்டன. *2014 – பழம்பெரும் தமிழ் நடிகை அஞ்சலிதேவி காலமானார்.


