News April 8, 2025
மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலி 3,600ஆக அதிகரிப்பு

மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 3,600ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 28-ல் நேரிட்ட நிலநடுக்கத்தால் மியான்மரில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பலர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தொடர்ந்து பலியாகி வருவதால் பலி அதிகரித்தபடி உள்ளது. தற்போது 5,017 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160 பேரை காணவில்லை. இதனால் பலி மேலும் உயரக்கூடும்.
Similar News
News January 5, 2026
தென்னிலை அருகே விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு

திருச்சியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் தனது பைக்கில் கடந்த 1-ம் தேதி தென்னிலை கோட்டாந்தூர் சாலையில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் GH-ல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News January 5, 2026
இன்று கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கும் டிடிவி

தஞ்சையில் அமமுக செயற்குழு & பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவியை, மீண்டும் இணைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேநேரம், டிடிவியோ தவெகவுடன் கூட்டணி பேச்சை தொடங்கியதாகவும் கூறப்பட்டது. ஆனால், அவர் இதுவரை அதிகாரப்பூர்வமாக கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை. இன்று நடக்கும் பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
News January 5, 2026
போன் தொலைந்தால்.. இப்படி ஈசியா கண்டுபிடிக்கலாம்

ஆண்ட்ராய்ட் மொபைலில் Settings-ல் Google-ஐ கிளிக் செய்யுங்க *‘All Services’ அல்லது ‘Look for Find My Device’ என்ற ஆப்ஷன் தேர்வு செய்யவும் *‘Use Find My Device’ ஆப்ஷனை ‘Switch on’ ஆகி இருப்பதை உறுதி செய்யுங்க *மற்றொரு போனின் பிரவுசரில் google.com/android/find என்ற லிங்கில் தொலைந்த போனில் லாக்-இன் செய்யப்பட்டுள்ள கூகுள் அக்கவுண்ட்டை கொடுத்தால் எளிதாக லொகேஷனை தெரிந்து கொள்ளலாம். SHARE IT.


