News April 8, 2025
நாமக்கல்: உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி

மோகனூர் ஆண்டியாபுரம் செல்வம் மனைவி இளஞ்சியம் தனது பேரக்குழந்தைகள் ஐவி (வயது 3), சுஜீத் (வயது 5) ஆகியோர் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது நேற்று எதிர்பாராத விதமாக மூவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அவர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 13, 2025
தீரா கடன்களை தீர்க்கும் நாமக்கல் கோயில்!

நாமக்கல் அடுத்த அணியாபுரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை, கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 13, 2025
நாமக்கல்: VOTER லிஸ்டில் பெயர் இருக்கா? CHECK NOW

நாமக்கல் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News August 13, 2025
தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், ஆடி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 13) ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.