News April 8, 2025
தமிழகத்தில் போலி என்கவுண்ட்டர்: சீமான்

தமிழ்நாட்டில் நடப்பது அனைத்துமே போலி என்கவுண்ட்டர்கள்தான் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல் வழக்கை முடிப்பதிலேயே மும்முரம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். அவர்களது குற்றம் தெளிவுபடுத்தப்படவில்லை என்று சீமான் பேசியுள்ளார்.
Similar News
News December 18, 2025
ஷில்பா ஷெட்டி வீட்டில் ஐடி ரெய்டு

ஷில்பா ஷெட்டியின் மும்பை வீட்டில் வருமான வரித்துறை (IT) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பாஸ்டியன் ஹோட்டல் தொடர்பான வரிஏய்ப்பு புகாரில் இச்சோதனை நடந்து வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹோட்டலின் உரிமையாளர்களில் ஒருவராக ஷில்பா உள்ளார். அதேநேரம், பெங்களூருவில் உள்ள பாஸ்டான் ஹோட்டலிலும் IT அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
News December 18, 2025
தீக்குளித்து உயிரிழந்த பக்தர்: அண்ணாமலை வருத்தம்

மதுரை, நரிமேடு பகுதியை சேர்ந்த பூர்ண சந்திரன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தடை செய்த திமுக அரசை கண்டித்து பூர்ண சந்திரன் என்ற முருக பக்தர் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். வழக்கு கோர்ட்டில் உள்ளது, கோர்ட் மீது அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல
News December 18, 2025
நிதிஷ் ஹிஜாப்பை இழுத்தது சரி தான்: மத்திய அமைச்சர்

பிஹார் CM நிதிஷ்குமார், பெண் டாக்டரின் <<18575369>>ஹிஜாப்பை<<>> பிடித்து இழுத்தது சரி தான் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். அரசு திட்டத்தில் சரியான நபர்தான் பயனடைகிறாரா என்பதை தெரிந்து கொள்வது அவசியம். விமான நிலையத்திற்கோ, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவோ சென்றால், முகத்தை மூடியா வைத்திருப்பீர்கள், இது என்ன இஸ்லாமிய நாடா, இது இந்தியா, சட்டத்தின் ஆட்சியே இங்கு நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


