News April 8, 2025
BREAKING: ஒரு குவிண்டால் நெல் ₹2,500: அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ₹2500 வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், இந்த புதிய உத்தரவு வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் எனக் கூறினார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல், இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 3, 2026
இறால் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

கடல் உணவுகளில் ஒன்றான இறால் ருசியானது மட்டுமல்ல, ஆரோக்கியமும் நிறைந்தது என டாக்டர்கள் கூறுகின்றனர். *புரதச்சத்து தசைகளை வலுப்படுத்த, கொழுப்பை குறைக்க உதவுகிறது *கால்சியம், மெக்னீசியம் எலும்புகளை வலுவாக்குகின்றன *ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு நல்லது *வைட்டமின் பி12 மனச்சோர்வை குறைக்கிறது *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *செலினியம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.
News January 3, 2026
போதை வளர்க்கும் இடமா ஹாஸ்பிடல்? அன்புமணி

சிவகங்கையில் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பிரசவ வார்டில் மது விருந்துடன் புத்தாண்டை கொண்டாடி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். போதையை ஒழிப்பதற்கான அரசு ஹாஸ்பிடலை, போதையை வளர்க்கும் குடிப்பகங்களாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை என சாடியுள்ளார். மேலும் இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு ஆட்சியிலிருந்து திமுகவை அகற்றுவது தான் என்றும் கூறியுள்ளார்.
News January 3, 2026
BIG NEWS: அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்(Tamil Nadu Assured Pension Scheme) செயல்படுத்தப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாநில அரசு ஊழியர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50% பென்ஷன் கிடைக்கும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நீண்ட காலமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில், புதிதாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


