News April 8, 2025

TN பல்கலை.களுக்கு இனி கவர்னர் வேந்தர் இல்லை

image

TN பல்கலைக்கழக வேந்தர் பொறுப்புகளில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி விடுவிக்கப்பட்டுள்ளதாக திமுக MP வில்சன் தெரிவித்துள்ளார். கவர்னருக்கு பதில் பல்கலை.களுக்கு TN CM–ஐ வேந்தராக்கும் மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை குறிப்பிட்டு பேசிய அவர், இனி கவர்னர் வேந்தர் இல்லை என கூறியுள்ளார். TN பல்கலை.களுக்கு இனி அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் எனவும் தெரிவித்தார்.

Similar News

News April 19, 2025

செல்வத்தைப் பெருக்கும் மகாவிஷ்ணு காயத்ரி மந்திரம்!

image

மகாவிஷ்ணுவுக்கு உகந்த தினமான சனிக்கிழமையில் இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லுங்க. வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். மனநிம்மதி அடைந்து, செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
‘ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்’

News April 19, 2025

வாக்குகளை விற்பவர்கள் நாய், பூனையாக பிறப்பார்கள்

image

ம.பி., EX அமைச்சரும் பாஜக MLAவுமான உஷா தாக்கூர் பேசிய <>வீடியோ <<>>வைரலாகி வருகிறது. நான் கடவுளுடன் நேரடியாக பேசுவேன்; என்னை நம்புங்கள். வாக்களிக்கும் போது ஒருபோதும் நேர்மையை இழக்காதீர்கள். கடவுள் மேலே இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். பணம், மது, பரிசு பொருள்களுக்காக வாக்களிப்பவர்கள், மறுபிறவியில் ஒட்டகம், ஆடு, செம்மறியாடு, நாய் மற்றும் பூனையாக பிறப்பார்கள் என பேசியுள்ளார்

News April 19, 2025

அதிருப்தியை சமாளிக்க விருந்து வைக்கும் இபிஎஸ்

image

பாஜக உடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவில் எம்எல்ஏக்கள் உள்பட பலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் பணி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இபிஎஸ் முடிவெடுத்துள்ளார். இதனால், ஏப்.23-ம் தேதி இபிஎஸ் தனது வீட்டில் விருந்து வைத்து, அதிருப்தியில் இருப்பவர்களை சமாதனம் செய்ய செய்யவிருக்கிறார். இந்த விருந்தில் செங்கோட்டையன் உள்ளிட்டோரும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!