News April 8, 2025
ஈசன் தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக்கும் முறப்பநாடு திருத்தலம்

முறப்பநாடு கோவில் நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது. நவகயிலாயத்தில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பாக சிவபெருமான் குருபகவானாக அமர்ந்து அருள்பாலிக்கும் சிறப்பு இங்கு மட்டுமே உண்டு.புண்ணிய நதியாம் தாமிரபரணி ஆறு வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்வதால் தட்சிண கங்கை என்று பெயர். இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு சமம் என்று கூறுவார்கள்.
Similar News
News April 19, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று உங்கள் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தாலோ அல்லது வாட்ஸ்அப் மூலமாக வரும் இணைப்புகளை கிளிக் செய்து, பாஸ்வேர்டு, பின் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சைபர் புகார்களுக்கு அழையுங்கள் (1930)
News April 19, 2025
தூத்துக்குடி மாவட்டம் இரவு நேர ரோந்து விவரம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஏப்18) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே, பொதுமக்கள் அவசர காலத்தில் குறிப்பிட்டுள்ள போலீசாரின் எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
News April 18, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் சாகச விளையாட்டுகள்

சட்டப்பேரவையில் சுற்றுலா துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் ராஜேந்திரன் நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, முள்ளகாடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நீர் சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கின்றனர்.