News April 8, 2025
தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் தேதி அறிவிப்பு

நெல்லை கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கை நெல்லை மாவட்டத்தில் 15.04.25 அன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. ஐடிஐ பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பயிற்சி பெற்ற கல்வி நிறுவன தேர்ச்சி சான்று, பாஸ்போர்ட் புகைப்படம் ஆதாருடன் பங்கேற்கலாம்.*ஷேர் பண்ணுங்க
Similar News
News August 10, 2025
ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழப்பு

கருங்குளம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் பாளை திருச்செந்தூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக பைக் மோதியதில் பாலமுருகன் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த பாலமுருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து சிவந்திப்பட்டி போலீசார் விசாரணை.
News August 10, 2025
நெல்லை: ரேஷன் கார்டு ONLINEல விண்ணப்பிப்பது எப்படி?

நெல்லை மக்களே!
1. இங்கு <
2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
5. விண்ணப்ப நிலையை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில…
ரேஷன் கார்டு பெயர் நீக்கம், சேர்த்தல் தொடர்ச்சி வேணுமா COMMENT.. SHARE பண்ணுங்க!
News August 10, 2025
ரக்ஷா பந்தன் சகோதரிகளுக்கு பாஜக தலைவர் நன்றி தெரிவிப்பு

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் திருவிழா நேற்று நாடு முழுவதும் வட இந்தியர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பெண்கள் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி இனிப்பு வழங்கி வாழ்த்து பெற்றனர். இதற்கு அவர் நன்றி தெரிவித்து தனது வலைதளத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.